காஞ்சிபுரம் : பல் துலக்கும்போது கீழே விழுந்த பெண் வாயின் இடுக்குகளில் டூத்பிரஸ் வசமாக மாட்டிக்கொண்டதால் ஆப்ரேஷன் செய்து முகத்தின் வழியாக டூத்பிரஸ்ஸை அகற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவை சேர்ந்த ரேவதி (வயது 34) என்பவர் நேற்றைய முன்தினம் காலையில் வீட்டில் டூத் பிரஸ் வைத்து பல் துலக்கி கொண்டிருந்தார்.
பாத்ரூமில் பல் துலக்கி கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக ரேவதி வழுக்கி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் வாயின் பல் இடுக்குகளின் நடுவே டூத் பிரஸ் வசமாக சிக்கிக் கொண்டது.
வாயைத் திறக்க முடியாமலும் மூடமுடியாமலும் அலறிய ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அரசு தலைமை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நரேன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர்கள் ஆலோசனை செய்து ரேவதியின் கண்ணத்தின் வழியாக டூத் பிரஸ்ஸை அகற்றலாம் என முடிவெடுத்தனர்.
அதன்படி ரேவதிக்கு வலி ஏற்படாமல் இருக்க மயக்க மருந்து செலுத்தி வாயின் பல் இடுக்குகளில் வசமாக சிக்கிக் கொண்டிருந்த டூத்பிரஸ்ஸை முகத்தின் வெளிப்புறத்தில் காதின் கீழே துளையிட்டு கன்னத்தின் வழியாக வெளியே வந்த டூத்பிரஸ்ஸின் பாதியை வெட்டி எடுத்தனர்.
அதேபோல் வாயில் பல் இடுக்குகளின் மத்தியில் மிக ஆழமாக சிக்கிக்கொண்டிருந்த டூத்பிரஸ்ஸின் பாதியை ஆப்ரேஷன் செய்து வாயிலிருந்து அகற்றினர். தற்போது ரேவதி மருத்துவமனையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகிறார்.
முகத்தின் வழியாக டூத்பிரஸ்ஸை அகற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் நரேன் மற்றும் டாக்டர் வெங்கடேசன் ஆகியோர்களுக்கும் பாராட்டுகள் குவிகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.