பிரபல நடிகையை துரத்தி துரத்தி காதல் செய்த தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் : 50 வயதாகியும் யாரையும் திருமணம் செய்யாத சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 6:17 pm

தமிழ் சினிமா உலகில் இன்று ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் உள்ளனர். அதில் ஒரு சிலருக்கு சரியான பட வாய்ப்பு அமையாமல் இருந்தாலும் தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் நடிகை ஷாலினியை காதலித்து கரம் பிடித்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஹீராவை துரத்தி துரத்தி காதலித்தார். ஆனால் ஹீரா அஜித்துக்கு நோ சொல்லிவிட்டார். இதையடுத்து அஜித் தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இதே போல நடிகர் சரத்குமாரும் நடிகை ஹீராவை துரத்தி துரத்தி காதலித்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், வீட்டிற்கு பெண் கேட்டு சரத்குமார் சென்ற தகவல் எல்லாம் வெளியாகின. ஆனால் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற தகவல் வெளியேற வில்லை.

ஏராளமான முன்னளி கதாநாயகர்களுடன் நடித்த நடிகை ஹீரா இதுவரை யாரையும் திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…