கொளுத்தும் வெயில்…வீட்டினுள் முடங்கிய மக்கள்: வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்..!!

Author: Rajesh
6 April 2022, 5:19 pm

புதுச்சேரியில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வெயிலின் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் சுற்றுலாபயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

புதுச்சேரிக்கு விடுமுறை நாட்களில் வெளிநாட்டு பயணிகள் மற்றும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வாரம் முழுவதும் வருவது வழக்கம். இவர்கள் கடற்கரை சாலையில் கடலில் இறங்கியும், கடற்கரை மணல் பரப்பில் உக்கார்ந்து இருப்பதும் வழக்கம். ஆனால் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. பகல் 12 மணிக்கு மேல் வெளியில் வரஇயலாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்கி inன்றனர். மேலும் வெப்பத்தை தணிக்க குளிர்பானம், நொங்கு, இளநீர் உள்ளிட்ட பானங்கள் அருந்திக்கொள்கின்றனர்.

மேலும் புதுச்சேரி சுற்றுலா நகரம் என்பதால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு வரக்கூடிய ஏரளமான சுற்றுலாவினர்கள் வரத்து கடும் வெயில் காரணமாக வராததால் கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் வெறிசோடி காணப்பட்டது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!