யானைக் கூட்டத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளின் வாகனம் : விரட்டி மிரட்டிய காட்டு யானை.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 8:36 pm

நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்த காட்டு யானை விரட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வன பகுதியானது 325 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பகுதியில் சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் காடுகள் அனைத்தும் பச்சை பசேலென காணப்படுகிறது.

தற்போது இந்த பகுதிகளில் வனவிலங்குகள் என்னுடைய நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இந்த நிலையில் வனத்துறையினர் சார்பாக முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினரருடைய வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று காடுகள் மற்றும் வனவிலங்குகளை காண்பித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று அவ்வாறு சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை வாகனத்தை விரட்டியுள்ளது.

வாகன ஓட்டுனர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்புறமாக செலுத்தி எந்தவித சேதமும் இல்லாமல் வாகனத்தை நிறுத்தி உள்ளார். சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளது சமூக வலைத் தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!