கோடை விடுமுறையை கழிக்க சூப்பரான ஸ்பாட்: ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

Author: Rajesh
15 May 2022, 4:30 pm

தர்மபுரி: கோடை விமுறையை கொண்டாட தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல். இங்கு தமிழகம் மட்டும் அல்லமால் ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிஙலங்களிலிருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஒகேனக்கல்லின் இயற்க்கை அழகை கண்டு ரசிப்பார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்துமு மழை பெய்து வரவதால் தற்போது ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

மேலும் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் இன்று ஞாயிற்று கிழமையையொட்டி கோடை விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்துக்கொண்டு அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தனர்.

மேலும் இங்கு சமைக்கும் மீன் வருவல் மற்றும் குழம்புகளை ரசித்து சாப்பிட்டு சென்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • shri not even got payment from biggboss பிக்பாஸ்ல இருந்து Payment வரல; அவன் இப்படி ஆனதுக்கு காரணம்? ஸ்ரீயின் தோழி ஓபன் டாக்…