தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள் : போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்த வாகனங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 1:15 pm

கொடைக்கானல் : சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் மலைகளின் இளவரசி சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய வழிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக வருகை புரிந்துள்ளனர்.

மேலும் தொடர் விடுமுறையால் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய சுற்றுலாபயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மொயர் சதுக்கம், தூண்பாறை உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்து ஏரி பகுதியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் அவ்வப்போது பெய்கின்ற மழையும் மலைகளின் இலவரசி குளு குளு நிலையிலேயே வைத்திருக்கிறது. தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல கூடிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?