குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள் : ஐயப்ப பக்தர்களும் வருகை தந்ததால் நிரம்பி வழிந்த கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 1:44 pm

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று அதிகாலை
முதலே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு அங்கிருந்து வரும் வழியில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் நீராடி விட்டு பகவதி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்,.

அதுபோல இந்த ஆண்டும் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரி கடற்கரையில் குவிய தொடங்கினர் கர்நாடகா ஆந்திரா கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலே இந்த கடற்கரைக்கு வந்து சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.

இது மட்டுமல்லாது என்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகமாக வந்திருந்தனர் இவர்கள் கடற்கரையில் தங்கள் குடும்பத்தினருடன் நீராடியதுடன் திருவள்ளுவர் சிலை மற்றும் மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1099

    0

    0