2வது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…வங்கி பணிகள் முடங்கியது..!!

Author: Rajesh
29 March 2022, 8:55 am

தமிழகத்தில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. இதன்படி நேற்று முதல் நாள் போராட்டம் தொடங்கியது.

இதனை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,. தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் வேலைக்கு வராததால் வங்கி பணிகள் முடங்கின. இதுபோல பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் போராட்டம் வலுவாக இருந்தது.

தமிழகத்தில் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் முடங்கியது. அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?