விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம் : மெய்சிலிர்க்க வைத்த கலைக்குழுவினர்!
Author: Udayachandran RadhaKrishnan9 September 2024, 11:39 am
விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஆற்றில் கரைப்பது வழக்கம். கோவையில் விநாயகர் சதுர்த்தி 3 நாட்களாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி கோவை தொண்டாமுத்தூர் தலைமை விநாயகர் நண்பர்கள் குழு நடத்தும் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவானது விமர்சையாக நடைபெற்றது.
2வது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விழாவில் ஸ்ரீ கந்தவேலன் கிராமிய கலை குழு சார்பாக வள்ளி கும்மி அரங்கேற்றம் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. கலைக்குழுவினரின் ஆட்டம் அங்குள்ள பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.