வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan11 March 2025, 8:00 pm
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள வெறி நாய் கடி தனி பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதையும் படியுங்க: விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!
அவர் திடீரென அங்குள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து அந்த கண்ணாடியை கையில் எடுத்து தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய் கடித்து சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்த இடத்தில் வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது கோவை அரசு மருத்துவமனைக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.