அடுத்த அதிர்ச்சி.. ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் : நண்பர்களிடம் வாங்கிய கடனை கட்ட முடியாத இளைஞர் விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 5:00 pm

பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான் இவரது மகன் சல்மான் (வயது 22). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் சூதாட்ட விளையாடி வந்த நிலையில் சூதாட்டம் விளையாட நண்பர்களிடம் கடனாக பணப்பெற்று விளையாடியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சூதாட்டத்தால் பணத்தை இழந்த விரக்தியில் இருந்த சல்மான் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது அடுத்து சம்பவம் விரைந்து சென்ற கிணத்துக்கடவு போலீசார் சல்மான் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்