வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் மோசடி : போலி உத்தரவு கொடுத்து ஏமாற்றிய 2 பேர் கைது

Author: Babu Lakshmanan
8 October 2022, 11:09 am

கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலியான உத்தரவு கொடுத்து திண்டுக்கலை சேர்ந்தவரிடம் ரூ. 7 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் நித்தின் குமார். இவருக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த நவீன் (32), வெங்கடேசன் (34) ஆகிய 2 பேர் ரூ.7 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பணத்தை பெற்ற இருவரும், நித்தின் குமாருக்கு போலியான உத்தரவு கொடுத்து ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நித்தின் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து நவீன், வெங்கடேசன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்