லிஃப்ட் கேட்ட கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்… காட்டுக்குள் இளைஞர் செய்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2023, 9:40 am

கரூரை சேர்ந்த மாணவி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை கரூரிலிருந்து ராசிபுரம் சென்றுள்ளார்.

அப்போது கல்லூரிக்கு நேரமான காரணத்தால் முன்பின் அறிமுகமில்லா இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரும் அந்த மாணவியை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில், தனது அக்காவுக்கு பிரசவ வலி என கூறி அருகில் உள்ள காட்டு பாதை வழியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்தி மாணவியின் தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

மேலும், மாணவியிடம் இருந்து பணம், செல்ஃபோனை பறித்து அங்கிருந்து மாணவியின் உடைகளையும் சிலவற்றை எடுத்துக்கொண்டு இளைஞர் தப்பி ஓடி விட்டார்.

  • GBU movie audience reaction எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…