குட்டையில் குளித்த போது மகள்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.. காப்பாற்ற போராடிய தந்தை : முடிவில் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 10:25 am
drown
Quick Share

சூலூர் அருகே போகம்பட்டி யில் ஞாயிற்றுக்கிழமை குட்டையில் குளிக்க சென்ற சந்தை மகள் மற்றும் அண்ணன் மகள் உள்பட மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சூலூர் அருகே போகம்பட்டியில் சுண்டக்காமுத்துரை சேர்ந்த மணிகண்டன் அவரது மகள் பத்தாவது படிக்கும் தமிழ்செல்வி மற்றும் மணிகண்டனின் அண்ணன் மகள் எட்டாவது படிக்கும் புவனா  உள்ளிட்ட அருகிலுள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.   

மணிகண்டன் சுண்டக்காமுத்தூரில் இருந்து போகம்பட்டியில் தனது தாய்விட்டிற்கு வந்த தனது மனைவி மற்றும் மகளை பார்க்க வந்துள்ளார். 

இந்நிலையில் மூவரும் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென கால் வழுக்கி குட்டையில் மூழ்கிய மகள்களை நீச்சல் தெரியாத மணிகண்டன் காப்பாற்ற முயன்று உள்ளார்.

அப்போது மூன்று பெரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மணிகண்டன் மனைவி மூன்று பேரையும் நீண்ட நேரமாக வராததால் தேடி உள்ளார்.

அப்போது அவர்களது உடை மட்டும் குட்டையின் ஓரத்தில் கிடந்துள்ளது. இதனை அடுத்து ஊர்க்காரர்கள் இடம் தெரிவித்து குட்டையில் இறங்கி தேட முயன்றனர். ஆனால் சேரும் சகதியும் அதிகமாக இருந்ததால் உடனடியாக சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீயணைப்பு அலுவலர் ரகுநாதன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குட்டையில் மூழ்கிய மணிகண்டன் தமிழ்ச்செல்வி புவனா ஆகிய மூன்று பேரது உடல்களை மீட்டனர்.

மேலும் படிக்க: கோப்பையை கைவிட்ட ஐதராபாத்.. அணி வீரர்களை கண்ணீர் விட்டு பாராட்டிய உரிமையாளர் : வைரலாகும் வீடியோ!

இது பற்றி தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரது உடல்களையும் கைப்பற்றி சிங்காநல்லூர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி புதுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் அப்பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை குளிக்க வேண்டாம் என அரிவுறுத்தினர். மேலும் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

Views: - 129

0

0