அந்தப் பக்கம் போகாத மச்சி.. வேணாம் : சொல்ல சொல்ல கேட்காமல் அருவியில் குளித்த இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 11:55 am

அந்தப் பக்கம் போகாத மச்சி.. வேணாம் : சொல்ல சொல்ல கேட்காமல் அருவியில் குளித்த இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலாத்தலமான கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட மூஞ்சிகள் பகுதியில் சாக்லேட் கடை நடத்தி வரும் நசீர் என்பவரின் மகன் நதிர் 20 மற்றும் கார்த்தி என்பவரின் மகன் கோகுல் 20 இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக கோகுல். நதிர் மற்றும் இவர்களின் நண்பர்களுடன் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேத்துப்பாறை அருகே உள்ள அஞ்சு வீடு அருவியில் குளிப்பதற்காக மதியம் 2 மணிக்கு மேல் சென்றதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்த பொழுது விளையாட்டு தனமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர் சென்றவர்கள் இருவரும் உள்ளே சிக்கி உள்ளனர்

இதை எடுத்து உடன் இருந்த அவரது நண்பர்கள் தனது நண்பர்கள் வெளியே வராத நிலையில் காவல்துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து இருவரையும் தேடும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவர் சடலங்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மாணவர்கள் இருவர் விடுமுறைக்காக குளிக்க சென்ற போது உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 362

    0

    0