துக்க வீட்டில் துயரம்… உயிர் பலி வாங்கியதா சடலம்? கோவையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2024, 5:19 pm

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (85) இவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ராமலட்சுமி உயிரிழந்தார்.

இன்று அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு இறந்த ராமலட்சுமி உடலை ஃப்ரீசர் பாக்ஸ் மூலம் வீட்டில் வைத்திருந்தனர்.

Fire in Funeral

இன்று காலை துக்க நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு ஏராளமான பேர் வந்திருந்து ராமலட்சுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி கொண்டு இருந்தனர்.

அப்போது அப்பகுதியில் காலை 10:30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரீசர் பாக்ஸ் ஏசி கிடைக்காது என்பதால் உடனே ஜெனரேட்டர் மூலம் பிரேசர் பாக்ஸ் க்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Using Petrol in Generator

அப்போது ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அங்கு புகைமண்டலம் ஏற்பட்டது.

ராமலட்சுமி உடல் இருந்த அறையில் இருந்த உறவினர்கள் வெளியே ஓடினர். சிலர் ஒரு அறையில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: திமுக பிரமுகரை சுத்துப்போட்ட பெற்றோர்.. மதுரையில் மாடியில் இருந்து தவறிய மாணவன்!

இதில் பத்மாவதி, பானுமதி ,ஶ்ரீராம், ராஜேஸ்வரன் ஆகிய 4 பேர் ஒரு அறையில் மாட்டிக் கொண்டனர்.அவர்களை உறவினர்கள் மீட்டனர்.

உள்ளே தீக்காயம் அடைந்து போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் பத்மாவதி (55) என்பவர் இறந்தார்.

மற்ற மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துக்க நிகழ்ச்சிக்காக சென்ற உறவினர்கள் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look தாலியுடன் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 426

    0

    0