மேம்பாலத்தில் பைக்கில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்த சோகம் : சிகிச்சை பலனின்றி பலியான பரிதாபம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2022, 11:20 am
உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ப பு.மாம்பாக்கம் கிராமம் . இந்த கிராமத்தை சேர்ந்த வேலு என்பருடைய மகன் சூர்யா (20 ) என்ற வாலிபர் ஒரு இருசக்கர வாகனத்தில் பு. மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு கட்டையில் இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
அப்போது மேம்பாலத்தின் மேலே இருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் சூர்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தினால் ரயில்வே மேம்பாலத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது