சுற்றுலா வந்த இளைஞர் உயிரிழந்த சோகம் : கடலில் குளித்த போது அலையில் சிக்கி பலி

Author: kavin kumar
21 February 2022, 2:53 pm

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இளைஞர் கடற்கரையில் குளித்த போது அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கர்நாடகா மாநிலம் பெங்களூரில், தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் 8 இளைஞர்கள் நேற்று புதுச்சேரிக்கு வந்தனர். தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள் இன்று கடற்கரை சாலையில் உலா வந்தனர். இதில் மனோஜ், கார்த்திக், வினாயக், சிவா ஆகிய நான்கு இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது விநாயக் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் வினாயக்கை மீட்டு கரைக்கு இழுத்து வந்தனர்.

இதனை அடுத்து இது குறித்து பெரிய கடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் வினாயக்கிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…