கன்னத்தில் அறை வாங்கியவர் உயிரிழந்த சோகம்… பரபரப்பு சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2025, 5:59 pm
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு காஞ்சிரமற்றம் பகுதியை சார்ந்த ஹனீஃப். தனது காரில் சென்று கொண்டு இருக்கும் போது முலந்துருத்தி பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் காரை நிறுத்த முயன்றார்.
இதையும் படியுங்க : திமுக அரசுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கா? நினைவூட்டிய அண்ணாமலை!
அப்போது முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த ஷிபு என்பவரின் காரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த ஷிபு மற்றும் ஹனீஃப் காரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காரில் இருந்து வெளியே வந்த ஹனீஃப்பை ஷிபு ஓங்கி கன்னத்தில் அறைந்து உள்ளார்.
இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஹனீஃப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னத்தில் அறைந்ததால் உயிழந்த நபர்..!#Trending | #Kerala | #streetfight | #Death | #CCTV | #ViralVideos | #UpdateNews360 pic.twitter.com/XYUFS0zfNE
— UpdateNews360Tamil (@updatenewstamil) January 6, 2025
இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வெளியான சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.