ஆற்றுக்குள் நடந்து செல்லும் போது விபரீதம்… ஆழத்தில் சிக்கி தத்தளித்த இருவர் : ஒருவர் சடலமாக மீட்பு!!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் ஜக்கம் நாயக்கர் (55) மற்றும் சக்திவேல்(24) உள்பட ஏழு பேர் நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டிக்கு மரம் வெட்ட சென்றுள்ளனர்.
இவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக முசிறி – குளித்தலை பாலம் அருகே பேருந்தில் வந்து இறங்கியுள்ளனர். அப்போது முசிறி ஆற்றை கடந்து குளித்தலை செல்வதற்காக ஜக்கம்நாயக்கர் மற்றும் சக்திவேல் இருவரும் ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளது எனக் கூறி ஆற்றில் இறங்கி குளித்தலைக்கு நடந்து சென்றுள்ளனர்.
மற்றவர்கள் முசிறி பாலத்தின் மேலே குளித்தலைக்கு நடந்து சென்றுள்ளனர். இதில் ஜக்கம்நாயக்கர் ஆழம் தெரியாமல் இறங்கியதில் ஆற்றில் தத்தளித்துள்ளார்.
இதை பார்த்த சக்திவேல் ஆற்றில் இறங்கி அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஜக்கம் நாயக்கர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஜக்கம் நாயக்கரை மீட்டனர். தொடர்ந்து முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தேடி சக்திவேலை சடலமாக மீட்டனர்.
தகவல் அறிந்த முசிறி காவல்துறையினர் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்
கொண்டு வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.