சென்னையை தொடர்ந்து விபத்தில் சிக்கிய மற்றொரு ரயில் : சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து…மற்ற ரயில்கள் தாமதமாக புறப்பட்டது!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 6:34 pm

மதுரை : சரக்கு ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மற்ற ரயில்கள் தாமதமாக புறப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

வேளாண்மைக்குப் பயன்படும் டிராக்டர் வண்டிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் ஒன்று மதுரை கூடல்நகரில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்த ரயிலின் கடைசி சரக்குப் பெட்டியின் ஒரு சக்கரம் மட்டும் திடீரென தடம் புரண்டு செல்லூர் அருகே ரயில் பாதையைவிட்டு இறங்கியது.

இதன் காரணமாக மதுரையில் இருந்து புறப்பட்டுச் சென்ற குருவாயூர்-சென்னை விரைவு ரயில் மதுரை தத்தனேரி வைகை பாலத்தில் நிறுத்தப்பட்டது.

பிறகு அந்த ரயில் மீண்டும் மதுரை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பிற்பகல் மேல் மீண்டும் ரயில் புறப்பட்டது.

இந்நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டியைச் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1148

    0

    0