கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட அசதியால் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் வெகு விமர்ச்சையாக நடைப்பெறும். அதன் வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 14ந்தேதி துவங்கியது. முக்கிய நாளான 10ம் நாள் நேற்றிரவு காவடி எடுத்தல், சாமி வீதி உலா நிகழ்ச்சிக்கள் விடிவிய நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துத் கொண்டனர்.
இந்தநிலையில் திருவிழாவை காணவந்த உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருள் முருகதாஸ் (17), கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் பரத் குமார் (17), நாகை மாவட்டம், தாணிக்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த முருகபாண்டியன் (24) ஆகிய 3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டதால் சோர்வு ஏற்பட்டதுடன் அருகில் இந்த ரயில்வே தண்டாவளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
இதில் அருள் முருகதாஸ் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரத் குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரத்குமார் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவின்போது ஒரே நாளில் மூன்று இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த துயர சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.