மதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் இன்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் 21750 ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட மதுரை தேனி இடையிலான பயணியர் விரைவு ரயிலில் இன்று காலை மகிழ்ச்சியுடன் பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 19, 31, 33, 273 பயணிகள் பயணி சீட்டு பெற்றுள்ளனர் அதன் மூலம் பெற்ற வருமானம் ரூபாய் 14940 ஆகும்.
வடபழஞ்சியிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 7, 10, 27 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 1590 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109 பயணிகள் ரூபாய் 3,270 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணிகள் ரூபாய் 1,950 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர்.
இன்று இந்த ரயிலில் மொத்தமாக 574 பயணிகள் பயணம் செய்ததில் ரூபாய் 21,750 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.