3 நாட்களாக ஸ்ரீவைகுண்டத்தில் தவித்த ரயில் பயணிகள்.. பேரிடர் மீட்பு குழுவால் மீட்பு.. சென்னைக்கு அழைத்து செல்ல திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2023, 9:51 pm

3 நாட்களாக ஸ்ரீவைகுண்டத்தில் தவித்த ரயில் பயணிகள்.. பேரிடர் மீட்பு குழுவால் மீட்பு.. சென்னைக்கு அழைத்து செல்ல திட்டம்!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் ரெயில்வே நிலையத்தில் திருச்செந்தூர் ரெயில் மாட்டிக்கொண்டது .

சுமார் 3 நாள்கள் கழித்து அதில் இருந்த 828 பயணிகள் பாத்திரமாக தேசிய மீட்பு படையினர் மூலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து அரசு பேருந்துகள் மூலமாக அவர்கள் வாஞ்சிமணியாச்சி ரெயில்வே நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

வரும் வழியில் ரெட்டியார்பட்டியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மற்றும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு குடி தண்ணீர், உணவு வழங்கப்பட்டது.. இதன் பின்னர் அவர்கள் ரெயிலில் அமர வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 பேருந்துகள் வரவேண்டிய உள்ளது இதன் பின்னர் ரெயில் கிளம்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 484

    0

    0