அறையில் இருந்து அலறி ஓடி வந்த பயிற்சி மாணவி : மருத்துவர் கொடுத்த பாலியல் டார்ச்சர்… அரசு மருத்துவமனையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 5:47 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வரும் மாணவி ஒருவர் இரண்டு மாத பயிற்சிக்காக குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருபவர் எஸ்.பாபு . அரசு மருத்துவர் பாபு நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் நர்சிங் பயிற்சி பெறும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சடைந்த அந்த மாணவி கூச்சலிட்டவாரே அறையில் இருந்து வெளியே ஓடி வந்து இது குறித்து அங்கு பணியாற்றிய வரும் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் சக நர்சிங் மாணவிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர்கள் மாணவியுடன் வந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் பாபு மீது புகார் அளித்தனர்.

மாணவியின் புகாரைத் தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் பாபு மீது நான்கு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் தலைமறைவான அரசு மருத்துவர் பாபுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பயிற்சிக்கு வந்த செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியிலும் செவிலியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai 2 box office collection தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!
  • Views: - 250

    0

    0