சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி? பகீர் கிளப்பிய காடேஸ்வரா சுப்பிரமணியம்!
தாராபுரம் பகுதிக்கு வருகை தந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம் அடைந்துள்ளது.
கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. காவல்துறையினர் மெத்தனப்போக்கே இதற்கு காரணம். தமிழக கல்லூரிகளில் குச்சி மிட்டாய், சாக்லேட் ,என நூறு வடிவங்களில் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை ஆகிறது. கல்லூரி மாணவிகளுக்கு இந்த போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது வருந்ததக்கது.
உளவுப் பிரிவு போலீசார் மற்றும் லோக்கல் போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளனர் .சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்வருடன் போதைப் பொருள் விற்பனை மன்னன் ஜாபர் சாதிக் சர்வசாதாரணமாக போட்டோக்கு போஸ் கொடுத்ததும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்ததை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியில் ஒரு 40-ஏக்கர் நிலத்தில் சுமார் 50-ஆண்டுகளாக குத்தகைக்கு இருந்த குப்புசாமி கவுண்டர் குடும்பத்தினர் திருப்பூர் சென்றிந்த போது ஆளுங்கட்சியை சேர்ந்த கும்பல் அத்துமீறி நுழைந்து பைப்புகளை உடைத்தும் வீட்டை சேதப்படுத்தியும் உள்ளனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
மேலும் படிக்க: பயணிகள் அவதி…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை : ஊழியர்கள் ஷாக்!
உடனடியாக விசாரணை செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் விரைவில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
This website uses cookies.