தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் : டிஎஸ்பி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2023, 11:26 am
தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் : டிஎஸ்பி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் 35 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.