தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2024, 5:38 pm
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்ததில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை எஸ்.பி. சிவபிரசாத், தேனி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி எஸ்.பி. டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை, கிருஷ்ணகிரி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக பெரோஸ் கான் அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.