ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. சட்டம் ஒழுங்கு பிரிவில் ட்விஸ்ட் : தமிழக அரசு உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2024, 6:21 pm
தமிழக அரசின் மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான பாலமாக மாவட்ட ஆட்சியர்கள் இருந்து வருகின்றனர். எனவே அரசு திட்டங்கள் சாதாரண மக்களுக்கு சென்று சேர்வதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அப்படி மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு உரிய வகையில் கொண்டு செல்லாத மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் அவ்வப்போது இடம் மாற்றம் செய்யப்படுவார்கள். மேலும் நிர்வாக வசதிக்காகவும் பணியிட மாற்றம் நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரம் உள்துறை செயலாளர் முதல் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் வரை மாற்றப்பட்டனர்.
இந்தநிலையில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் உள்துறை செயலாளராக இருந்த அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் காவல் ஆணையர் முதல் ஐஜிக்கள் வரை இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக டிஜிபியாக மாற்றம்.
மேற்கு மண்ட காவல்துறை ஐஜியாக இருந்த பவானீஸ்வரி தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றம்.
தமிழக காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா நெல்லை நகர காவல் ஆணையராக மாற்றம்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் கவனிப்பார்.
தமிழக காவல்துறை (பொது) ஐஜியாக இருந்த செந்தில் குமார் மேற்கு மண்டல காவல்துறை ஐஜியாக மாற்றம்.