கேட்கும் இடங்களுக்கு பணிமாற்றம்… நூதன முறையில் லஞ்சம் : சிக்கிய அதிகாரிகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 9:54 pm

நாமக்கல்லில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் செவிலியர்கள் கேட்கும் இடங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தை பெறுத்தவரை 76 செவிலியர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் இந்த பணியிடமாற்றத்துக்கு செவிலியர்களிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதாவது புதிய பணி இடத்துக்கு செல்ல தற்போது வேலை செய்யும் இடத்தில் இருந்து முறைப்படி விடுபட வேண்டும். ஆனால் லஞ்சம் வழங்காத செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பணியில் இருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையை சுகாதாரத்துறை அதிகாரிகள் கையில் வாங்காமல், கூகுள்பே மூலம் பெற்றதாக புகார் எழுந்தது.

இப்படி லஞ்சம் கொடுத்தவர்களை பணியில் இருந்து விடுவித்த நிலையில் தாமதம் செய்வதர்களை விடுவிக்காமல் இருந்தததாக கூறப்படுகிறது.

இதுபற்றிய புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கூகுள்பே மூலம் செவிலியர்களிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி, மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்