பணம் கேட்டு சுற்றுலா பயணிகளை மிரட்டும் திருநங்கைகள் : இளைஞர்களின் சட்டையை கிழித்து டார்ச்சர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2022, 6:01 pm

திண்டுக்கல் : உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சுற்றுலா தளமான கொடக்கானலில் குறிப்பாக நட்சத்திர ஏரி பகுதியில் பிஎஸ்என்எல் அருகே சுற்றுலா வந்த இளைஞர்களிடம் திருநங்கைகள் வழி மறித்து பணம் கேட்டு மிரட்டுவது பாலியல் தொந்தரவுகளில் ஈடுபடுவது பணம் தர மறுக்கும் இளைஞர்களிடம் சண்டையிட்டு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது உட்பட பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணம் தர மறுக்கும் இளைஞர்களிடம் சண்டையிட்டு அவர்களின் சட்டையை கிழித்து நடுரோட்டில் செருப்பால் அடித்து ஆபாச வார்த்தைகளால் திட்டுவது என அடுக்கடுக்கான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு இளைஞரை மூன்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சுற்றிவளைத்து திட்டுவது தாக்குவது அவரது சட்டையை கிழிப்பது என வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது,.

கொடைக்கானலில் பெயரளவுக்குத்தான் காவல்துறை அதிகாரிகள் உள்ளார்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!