8 பேருடன் திருமணம்… கோடிக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டிய திருநங்கை ; கமிஷனர் அலுவலகத்தில் குவிந்த கூட்டம்..!!

Author: Babu Lakshmanan
20 September 2022, 3:46 pm

15க்கும் மேற்பட்ட ஆண்களை ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி 8 பேரை திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருநங்கை அபேஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை பபிதா ரோஸ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து, நாடக திருமணங்கள் செய்து இதுவரை 15க்கும் அதிகமான ஆண்களை ஏமாற்றியுள்ளார். இதில் வெவ்வேறு மாவட்டங்களில் நாடகமாடி 8 நபர்களை திருமணம் செய்தும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

8 பேருடன் திருமணம்... கோடிக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டிய திருநங்கை ; கமிஷனர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம்..!!

இந்த நாடகத் திருமணங்களின் மூலம் லட்சக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் நகை என மிக பெரிய மோசடியில் இவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. திருநங்கை பபிதா ரோஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

8 பேருடன் திருமணம்... கோடிக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டிய திருநங்கை ; கமிஷனர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம்..!!

ஈரோடு, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, கோவை, மடத்துக்குளம் (திருப்பூர்), விருதுநகர்,
ராஜாப்பாளையம், நாகர்கோவில் போன்ற பல ஊர்களில் இருந்து பாதிக்கப்பட்ட ஆண்கள், காவல் துறையில் பணியாற்றி வரும் நபர்கள், நகை கடை உரிமையாளர்கள் என சுமார் 15க்கும் அதிகமான நபர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் பபிதாரோஸை கைது செய்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவை அளித்தனர்.

8 பேருடன் திருமணம்... கோடிக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டிய திருநங்கை ; கமிஷனர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம்..!!
  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!