காசு கொடுக்காத இளைஞர்களை கட்டையால் அடித்து விரட்டிய திருநங்கைகள் : வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2022, 9:42 pm

கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரிடம் திருநங்கைகள் யாசகம் கேட்டு அவரை தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரை மறித்த திருநங்கைகள் அவரிடம் யாசகம் கேட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர்களிடம் பணம் ஏதும் இல்லாததால் தர மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அவர்கள் சூழ்ந்து கொண்டு இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது உள்ளூர்வாசி ஒருவர் அந்த திருநங்கைகளை கண்டித்துள்ளார்.

https://vimeo.com/769926018

இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் கையில் கட்டைகளை எடுத்து கொண்டு அந்த இளைஞரை துரத்தியுள்ளனர். இதனால் அந்த இளைஞர் பயந்து ஹோட்டலுக்குள் தஞ்சமடைந்த நிலையில் திருநங்கைகளின் இந்த செயல் சிசிடிவியில் பதிவாகி அது வெளியே வந்திருக்கிறது..

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 474

    0

    0