இளைஞரிடம் அத்துமீறிய திருநங்கைகள்.. கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் வழிப்பறி : போலீசார் எடுத்த அதிரடி ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 November 2022, 9:47 pm

கரூரில் இளைஞர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் 27 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் எஸ்பி உத்தரவின் பேரில் போலீசாரால் கைது.

கரூர் நகர காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கரூர் பேருந்து நிலையம் அருகில் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற போது பேருந்து நிலையத்தில் இருந்த இசைப்பிரியா (வயது 24), ராகவி (வயது 27), தில்ஷிகா,(வயது 23), இனியா (வயது 22) ஆகிய திருநங்கைகள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் ரூ.27,500/- பணத்தை பறித்து கொண்டனர்.

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருநங்கைகளிடமிருந்து 2 பவுன் செயின் மற்றும் பணத்தை மீட்டு திருநங்கைகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரூர் நகர காவல் நிலையத்தில் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து திருநங்கைகள் வழிப்பறி செய்த நகை மற்றும் பணத்தை மீட்டது தொடர்பாக, கேள்விபட்டு மேற்படி சம்வத்தை போன்று திருநங்கைகளிடம் நகை மற்றும் பணத்தை இழந்தவர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர் எனவும், புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 595

    0

    0