பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ட்ராவல் பேக் : சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… குற்றவாளியை தேடும் பணி தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 10:02 pm

வேலூர் : காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேகில் 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்களின் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி செல்லப்படுகின்றது.

அதனை தடுக்கும் வகையில் இன்று வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன்,சீனிவாசன், தலைமை காவலர் சாந்தி, காவலர் மதன், போலீசார் கொண்ட குழுவினர் இன்று காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேகை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.

அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி