சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மரம் அகற்றம் : நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 2:28 pm

திண்டுக்கல் : கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில் பட்டுப்போய் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி நின்று கொண்டிருந்த மரம் அகற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில், படகு குழாம், குதிரை ஏற்ற கூடம், மிதி வண்டி சவாரி என அனைத்தும் குவிந்துள்ள இடமாக உள்ளது.

அங்கு பொழுதுபோக்கிற்காக குவியும் பயணிகளை, பட்டுப்போன மரம் ஒன்று விழும் நிலையில் சுற்றுலா பயணிகளையும் அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தி வந்தது.

இதனை நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். கோரிக்கை மீது உடனடியாக அரசுத்துறையினர் நடவடிக்கை எடுத்து பட்டுப்போய் ஆபத்தாக இருந்த மரத்தை அகற்றினர்.

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!