#மிதக்குது_சென்னை… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் : உதவிக்கு மாநகராட்சி அறிவித்துள்ள இலவச எண்கள்!!!
கனமழையால் சென்னை முழுக்க 145 இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், அதில் 68 இடங்களில் முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய 77 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
அந்தவகையில், மழை தொடர்ந்து பெய்து வந்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அபாயம் இருக்கும் நிலையில், அவற்றை மோட்டார் மூலம் வெளியேற்றவும் தயார் நிலையில் 296 மோட்டார்கள் உள்ளதாகவும், 40 மோட்டார்கள் இப்போது தேங்கியுள்ள நீரை வெளியேற்றப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன், சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற இலவச உதவி எண்ணை நேற்றிரவு அறிவித்திருந்தது சென்னை மாநகராட்சி. அதேபோல. 044 25619204, 044 25619206, 044 25619207, ஆகிய எண்களிலும், 94454 77205 என்ற வாட்ஸ்அப் நம்பரிலும் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது.
இப்போது மேலும் கூடுதலான இலவச உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், +91 94454 7720 என்ற வாட்ஸ் அப் நம்பரை வெளியிட்டிருக்கிறது.. இந்த எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம் என்றும் மாநகராட்சி நிர்வாகம், சென்னைவாசிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது.
இதேபோல், சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றும், புகார்களை தெரிவிக்க 044-45674567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.
அதே போல சென்னை முழுவதும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை தேங்கியுள்ளதால் ட்விட்டரில் சென்னை வாசிகள் #மிதக்குது_சென்னை என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.