“எங்கக்கிட்டையே இந்தித் திணிப்பா? கிளப்புங்க போராட்டத்த!”-சாலை மறியல் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

Author:
27 June 2024, 7:24 pm
Quick Share

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் திருச்சி நீதிமன்றம் முன்பு சாலை மறியல் போராட்டம்!

மூன்று குற்றவியல் சட்டங்களை பெயர் மாற்றம் செய்து இந்தி மொழியை வைத்ததற்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, அனைத்து வக்கீல்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், வக்கீல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும், இந்திய அரசியலமைப்பு பிரிவு, 348க்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதை வன்மையாக கண்டிப்பது என்று போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.புதிய சட்டத்தை நிறுத்தி வைத்து, மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராடத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 103

0

0

Leave a Reply