“இல்லம் தேடி கல்வியை நிறுத்தாதீங்க”- ஆட்சியரகத்தில் குவிந்த ஆசிரியர்கள்!

Author:
27 June 2024, 4:41 pm
Quick Share

இல்லம் தேடி கல்வி நிறுத்தக்கூடாது மாவட்ட ஆட்சியரகத்தில் குவிந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களால் பரபரப்பு!

கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளை முதல் மூன்று ஆண்டு நிறைவடைகிறது.

இல்லம் தேடி கல்வியை தமிழக அரசு, நிறுத்தக்கூடாது. தமிழகம் முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளோம், ஏராளமான ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவை ஆற்றி வருகிறோம். ஏராளமான கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதற்கு இல்லம் தேடி கல்வி தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5000 தன்னார்வலர்கள் கல்வி சேவை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க பல்வேறு வகையில் ஆர்வம் காட்டி வருகிறோம். பெற்றோர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வியை கொடுக்க முன்வர வேண்டும், என எங்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். எனவே இல்லம் தேடி கல்வியை நிறுத்துவதாக கூறப்படுகிறது.

இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5000 பேர் இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் நிலையில் இதில் 500 பேர் மட்டும் தேர்ந்தெடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் தன்னார்வலர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்மாரிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உங்களது கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையிடம் நிச்சயம் கொண்டு செல்கிறேன் என்று உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 119

0

0

Leave a Reply