நண்பருடன் சேர்ந்து 11 வயது மகளை சீரழித்த தந்தை… போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
8 June 2022, 4:09 pm

திருச்சி அருகே 5ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மற்றும் அவரது நண்பரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில். இவர்களது 11 வயது மகள் அருகில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியிடம் அவரது தந்தை ராஜா மற்றும் அவரது நண்பரான கணேசன் ஆகிய இருவரும் சிறுமியிடம் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தனது தாய் இந்திராணியிடம் சிறுமி கூறியும் அவர் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது சித்தி கெஜலட்சுமியிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கஜலட்சுமி உடனடியாக இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருச்சி மாவட்ட குழந்தைகள் நல காப்பக நிர்வாகி பிரபு மூலம் புகார் பெற்று ராஜா மற்றும் கணேசனை கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பின்னர் சிறையில் அடைத்தனர்.

பெற்ற தந்தையே தனது நண்பருடன் சேர்ந்து மகளை பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kalpana has crossed the danger stage அபாய கட்டத்தை தாண்டினார் கல்பனா… சுயநினைவு திரும்பியதால் விசாரணையை ஆரம்பித்த போலீஸ்!
  • Close menu