தூக்க மாத்திரை சாப்பிட்டு 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… தாய் கண்டித்ததால் விபரீத முடிவு..!!

Author: Babu Lakshmanan
20 July 2023, 7:03 pm

திருச்சி அருகே தாய் கண்டித்ததால் 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் துர்காதேவி (16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பகுதி இளைஞர் ஒருவரிடம் துர்கா தேவி பேசுவதை அறிந்த அவரது தாய் மகளை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த துர்காதேவி அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், அவரது உடலை தகனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?