யூடியூப்பை பார்த்து தற்கொலை செய்த 13 வயது பள்ளி மாணவி : உடல் பருமனாக இருந்ததால் விரக்தியில் விபரீத முடிவு!!

Author: kavin kumar
25 January 2022, 7:07 pm

திருச்சி : திருச்சியில் உடல் பருமனாக இருந்ததால் விரக்தியில் 13 வயது பள்ளி மாணவி யூடியூப் பார்த்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன். இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயது மகள் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் பருமனை குறைப்பதற்காக தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்து வந்தார்.இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சிவானி நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு சென்ற அவர் இன்று காலை வரை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவானி தூக்கில் தொங்கி உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பள்ளி மாணவி அபரிவிதமான உடல் வளர்ச்சி பருமன் ஏற்பட்டு தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளில் ஒவ்வொரு மாதமும் உடல் எடை குறைப்பது தொடர்பான பட்டியலை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் உடல் பருமனாக இருப்பதால் தொடர்ந்து மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இவரது தொலைபேசியில் தொடர்ந்து தற்கொலை செய்வது எப்படி என்ற சம்பந்தமாக வீடியோ பார்த்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!