திருச்சி விமான நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… சார்ஜாவில் இருந்து வந்திறங்கிய பயணியிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!!

Author: Babu Lakshmanan
9 May 2023, 10:34 am

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், திருச்சி விமான நிலையத்தில் திடீரென சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் இன்று அதிகாலை முதல்  என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோன்று மதுரை, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் 8க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த தஞ்சையை சேர்ந்த முகமது அசாப் என்பரை,தடுத்து நிறுத்தி விமான நிலையத்தில் வைத்தே என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்