பாரில் தகராறு… லண்டன்வாழ் தமிழர் பாட்டிலால் குத்திக்கொலை ; 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 9:37 am

திருச்சி கல்லுக்குழி மதுபான பாரில் குடிபோதையில் இருந்த நபரை பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கிராப்பட்டி மாதா குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னதுரை (47). இவர் லண்டனில் உள்ள ஒரு பெட்ரோல் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருச்சி வந்த அவர் நேற்று மாலை திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் சென்று மது அருந்தி உள்ளார்.

murder - updatenews360

அப்பொழுது, அங்கு வந்த சில நபருடன் வாய் தவறாக ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நபர்கள் மது போதையில் பாட்டிலை எடுத்து உடைத்து அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் அவர் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவரை மீட்ட காவல்துறையினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலியின்றி அவர் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த கண்ட்டோன்மென்ட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் அவரை கொலை செய்து தலைமறைவான அந்த நபர்கள் கல்லுக்குழி, முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த தர்மராஜ், சரவணன், பிரசன்னா என தெரிய வந்தது.

trichy police - updatenews360

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சின்னதுரை தற்போது லண்டன் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!