‘இந்தா சாவி போட்ட உடனே திறந்திடுச்சு’… நைசாக பைக்கை திருடிய வாலிபர்கள் ; சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 11:54 am

திருச்சியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம கும்பலை சிசிடிவி கட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் இரவு வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை (TVS Super XL) நிறுத்தி நிறுத்திவிட்டு படுக்கச் சென்றார்.

மேலும் படிக்க: மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா…? இல்ல கண்துடைப்பு நாடகத்தை தொடருமா..? திமுகவுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!!

இரவு நேரத்தில் அப்பகுதி நடமாடும் மர்ம கும்பல் ஒன்று இருசக்கர வாகன இருந்ததை நோட்டமிட்டு, பின்னர் ஒருவர் அந்த வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை தேடிச் சென்ற மர்ம கும்பலை சிசிடிவி உதவியோடு தேடி வருகின்றனர். இச்சம்பவம் பாலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush was the first actor who acted in six pack சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?