திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை.. கைதிகளிடம் இருந்து 60 செல்போன்கள் பறிமுதல்!

Author: Babu Lakshmanan
19 August 2022, 1:53 pm

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் மாநகர போலீசார் திடீர் சோதனை செய்ததில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய , இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 156 வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிறைவடையும் வரை இங்கு அடைக்கப்பட்டு இருப்பார்கள்.

வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சிறப்பு முகாமில் 3 மாநகர காவல் துணை ஆணையர்கள் அன்பு, ஸ்ரீதேவி, சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போதை பொருட்கள், ஆயுதங்கள், பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டுள்ளது.காலை 5 மணி முதல் 150 போலீசார் ஈடுபடுபட்டனர்.

இந்த அதிரடி சோதனையில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் சிறப்பு அகதிகள் முகாமில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் சோதனை நடத்திய நிலையில், இன்று மாநகர காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • simran sharing her memories of her sister simran 23 வருஷம் ஆகிடுச்சு, எப்படி மறக்கமுடியும்?- சிம்ரன் மனசுல இப்படி ஒரு துயரமா? அடப்பாவமே!