13வது மாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை ; விபரீத முடிவுக்கான பின்னணி குறித்து விசாரிக்கும் போலீசார்..!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 6:29 pm

திருச்சி ; திருச்சியில் 13வதுமாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள SIS அப்பாட்மெண்டில் 13வது மாடியில் குடியிருந்து வருபவர் பிரேம்குமார். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சௌமியா. இவர் காவேரி கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ரியா (11), சிவியா(6) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பேராசிரியர் சௌமியா கல்லூரியில் மாணவிகளுக்கு சுயதொழில் குறித்த தன்னம்பிக்கை குறித்தும், முன்னேற்ற பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று திடீரென 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த எடமலைபட்டிபுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குடும்பத்தகராறு காரணமாக சௌமியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏது காரணம் உண்டா? என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் கணவர் பிரேம்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் பேராசிரியர் எப்படி இந்த முடிவு எடுத்தார் என பேராசிரியர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?