ஆன்லைன் ரம்மி..! பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

Author: Vignesh
6 October 2022, 2:44 pm

திருச்சி: ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர், ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மணப்பாறையில், சந்தோஷ் என்ற 23 வயதான கல்லூரி மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகியதாக தெரிகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர், கடந்த 6 மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளது.

மேலும், இந்த வாலிபர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக, தனது அப் ஸ்டேட்டஸில் தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மி தான் காரணம் எனவும், அதற்கு அடிமையாகி அதிகளவு பணம் இழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். மேலும், மன அழுத்தத்தில் இருந்த சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…