நள்ளிரவில் பயங்கரம்… திருப்பதி தரிசனத்தை முடித்து திரும்பிய திருச்சி பக்தர்கள் 4 பேர் பலி!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2025, 10:24 am
திருச்சியை சேர்ந்த பக்தர்கள் சுமார் 40 பேர் தனியார் டிராவல்ஸ் பேருந்து மூலம் திருப்பதிக்கு பக்தி யாத்திரையாக சென்று சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு திருச்சிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்க: அது விதிகளின் படி நடந்தது.. இன்பநிதி விவகாரத்தில் மதுரை ஆட்சியர் விளக்கம்!
அவர்கள் பயணித்த பேருந்து சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே நள்ளிரவு 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியை கடந்து செல்ல முயன்ற போது அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். விபத்தில் பேருந்து கவிழ்ந்து அதில் பயணித்த திருச்சி சேர்ந்த 4 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த ஆறு பேரை திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.