ஏன் இந்த வக்கிர புத்தி.. X தளத்தில் அவதூறு பரப்பியவர்களின் கணக்கை வெளியிட்ட வருண்குமார் ஐ.பி.எஸ்..!

Author: Vignesh
24 August 2024, 9:54 am

திருச்சி மாவட்ட எஸ்பியாக பொறுப்பு வகிப்பவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆக பதவி வகித்து வருகிறார். சமீப நாட்களாக இவர்கள் இருவருக்கும் எதிராக இணையதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தானும் தனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ் பி அருண்குமார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்ப நபராக குழந்தைகள் பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் தளத்தில் இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ்ஸும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்திலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. கொடூர எண்ணமும் கொண்டவர்கள்தான் இதற்காக அவமானப்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் X தளத்தில் ஆபாசமாக, அவதூறு பரப்பியவர்களின் கணக்கை வெளியிட்ட திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் இவர்கள் அனைவரும் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 285

    0

    0